6th Tamil Term 1 Chapter 3 Grammar Mozhli Mudhal Irudhi Eluthukkal Guide

6th Tamil Term 1 Chapter 3 Grammar: Language Beginning and Ending Letters

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்

இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம் : இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கற்கண்டு

மொழி முதல், இறுதி எழுத்துகள்

நம் தமிழ் மொழியின் சொற்கள் நாம் எளிதாக ஒலிக்கும் வகையில் உருவானவை. வேற்று மொழிச் சொற்களைப் பேசுகையில் நமக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் மொழியின் சொற்களின் இயல்பையும் மரபையும் அறிந்து கொள்வது தேவையானது. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் எந்தெந்த எழுத்துகள் வரும் என்பதை அறிந்து கொள்வதால் மொழியை நன்கு பேசமுடியும்.

கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள்:
நன்றி     ணன்றி     னன்றி

இவற்றுள் நன்றி என்பதே சரியான சொல் அல்லவா?

பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துகளை எங்குகெங்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதும் மிக இன்றியமையாதது. தமிழ் எழுத்துகளின் வகை, தொகை பற்றி அறிந்து கொண்டோம். அவற்றுள் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் வருவதில்லை. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

மொழி முதல் எழுத்துகள்

மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.

(i) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். (ii) க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும். (iii) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும். (iv) - வரிசையில் '' என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா - ஙனம் (v) (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.) (vi) (எ.கா.) க - வரிசை எழுத்துகள் கடல், காக்கை, கிழக்கு, கீற்று, குருவி, கூந்தல், கெண்டை, கேணி, கைகள், கொக்கு, கோலம், கௌதாரி. (vii) - வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். (viii) - வரிசையில் ய, யாக, கயோ, யெள ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். (ix) வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
(i) மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா. (ii) ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது. (iii) ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. (iv) ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.

டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.

மொழி இறுதி எழுத்துகள்

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

(i) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும். (ii) ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
மொழி இறுதியாகா எழுத்துகள்
(i) சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. (ii) உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும். (iii) அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும். (iv) ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. (v) க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. (vi) உயிர்மெய் எழுத்துகளுள் எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.

கார்த்திக், ஹாங்காங், சுஜித், மார்க்கெட், திலீப், மார்ச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.

(vii) எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை. (viii) ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
(i) மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும். (ii) உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். (iii) ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். அளபெடை பற்றி உயர் வகுப்புகளில் அறிந்துகொள்வீர்கள்.

Tags : Term 1 Chapter 3 | 6th Tamil பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam : Grammar: Mozhli mudhal irudhi eluthukkal Term 1 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம் : இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்.