6th Standard Tamil Term 2 Chapter 1 Grammar - Ina Eluthukal Guide

6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: இன எழுத்துகள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்

இலக்கணம்: இன எழுத்துகள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : இலக்கணம்: இன எழுத்துகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் ஒன்று கற்கண்டு இன எழுத்துகள்
6 ஆம் வகுப்பு தமிழ் - இன எழுத்துகள்

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

இன எழுத்துகள் அட்டவணை
(எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
வல்லின மெல்லின இன எழுத்துகள்

இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.

உயிர் எழுத்துகளின் இன எழுத்துகள்

மெய்யெழுத்துகனைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத என்னும் எழுத்துக்கு என்பது இன எழுத்தாகும். என்னும் எழுத்துக்கு என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.

(எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

Tags: Term 2 Chapter 1 | 6th Tamil பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.

6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum : Grammar: Ina eluthukal Term 2 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : இலக்கணம்: இன எழுத்துகள் - பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.