6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்
கவிதைப்பேழை: ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal
இயல் இரண்டு
கவிதைப்பேழை
ஆசாரக்கோவை
நுழையும்முன்
நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும். நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும். இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர். நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன. அவற்றை அறிவோம் வாருங்கள்.
நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
- பெருவாயின் முள்ளியார்
சொல்லும் பொருளும்
(i) நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
(ii) ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
(iii) நட்டல் - நட்புக் கொள்ளுதல்
பாடலின் பொருள்
பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்; பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்; இனிய சொற்களைப் பேசுதல்; எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்; கல்வி அறிவு பெறுதல்; எல்லோரையும் சமமாகப் பேணுதல்; அறிவுடையவராய் இருத்தல்; நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.