5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 1
நமது பூமி (Our Earth) - வினா விடை
I. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. பூமிக்கும், சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.
2. பூமி, சூரியனை சுற்றி வலம் வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது.
3. பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் அண்டார்டிகா ஆகும்.
4. ஆசியா மிகப் பெரிய கண்டமாகும்.
5. செந்நிறக் கோள் என அழைக்கப்படுவது செவ்வாய்
6. நம் பூமி 71 சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
II. பொருத்துக (சிந்தித்து விடையளிக்கவும்)
(1) மிகச்சிறிய கண்டம்
(2) நீலக் கோள்
(3) நெப்டியூன்
(4) பருவகாலங்கள்
(5) பகலும் இரவும்
(2) நீலக் கோள்
(3) நெப்டியூன்
(4) பருவகாலங்கள்
(5) பகலும் இரவும்
- சூரியனை சுற்றி வலம் வருதல்
- ஆஸ்திரேலியா
- பூமி
- தன் சுழற்சி
- தொலைவான கோள்
- ஆஸ்திரேலியா
- பூமி
- தன் சுழற்சி
- தொலைவான கோள்
விடை:
1. மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா
2. நீலக் கோள் - பூமி
3. நெப்டியூன் - தொலைவான கோள்
4. பருவகாலங்கள் - சூரியனை சுற்றி வலம் வருதல்
5. பகலும் இரவும் - தன் சுழற்சி
1. மிகச்சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா
2. நீலக் கோள் - பூமி
3. நெப்டியூன் - தொலைவான கோள்
4. பருவகாலங்கள் - சூரியனை சுற்றி வலம் வருதல்
5. பகலும் இரவும் - தன் சுழற்சி
III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. பேரண்டம் பற்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக,
(i) பேரண்டம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய பரந்தவெளி ஆகும்.
(ii) இப்பேரண்டம் கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியதாகும்.
(iii) இப்பேரண்டத்தின் துல்லியமான அளவு இன்னும் அளவிடப்படவில்லை.
(iv) இவை வெளிப்புறமாக விரிவடைந்துகொண்டே செல்கின்றன.
2. சூரிய குடும்பம் வரையறு.
(i) நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.
(ii) வெளி கோள்கள் வாயுக்களால் ஆனது.
(iii) உள் கோள்கள் பாறை கோள்கள் ஆகும்.
(iv) இரு கோள்கள் உறைந்திருக்கும் கோள்கள் ஆகும்.
3. பூமி எப்படி உருவானது?
(i) பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘பெருவெடிப்பு' என்ற நிகழ்வு ஏற்பட்டது.
(ii) அதன் காரணமாக எண்ணிலடங்கா விண்மீன்களும், வான்பொருள்களும் தோன்றின. அதனுள் புவியும் அடங்கும்.
4. வேறுபடுத்துக: சுழலுதல் மற்றும் சுற்றுதல்
சுற்றுதல்
பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
சுழலுதல்
பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
5. புவியில் எத்தனைப் பெருங்கடல்கள் உள்ளன?
(i) பசிபிக் பெருங்கடல்
(ii) இந்தியப்பெருங்கடல்
(iii) தெற்குப் பெருங்கடல்
(iv) அட்லாண்டிக் பெருங்கடல்
(v) ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.
V. விரிவான விடையளிக்க.
1. சூரிய குடும்பம் பற்றி விளக்குக.
(i) சூரியக்குடும்பத்தில் கோள்கள் உள்ளன. அவற்றில் வெளிப்புற வாயுக்கோள்கள் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை.
(ii) உள் பாறைக்கோள்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்றவைகளாகும்.
(iii) யுரேனஸ் மற்றும் நெப்டியூன் உறைந்திருக்கும் கோள்கள் ஆகும்.
2. புவிக்கோளின் தன்மை பற்றி விவரி.
(i) பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள கோள்.
(ii) இது ஐந்தாவது பெரிய கோள் ஆகும்.
(iii) பூமி தன்னைத்தானே தன் அச்சில் சுற்றிக்கொண்டும், அதே நேரத்தில் சூரியனைச் சுற்றி சுற்றி சுழன்றுகொண்டும் வருகிறது.
(iv) பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது.
(v) பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
(vi) சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 150 மில்லியன் கிலோ மீட்டர் உள்ளது.
(vii) பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது.
3. கண்டங்களைப் பற்றி விவரி.
(i) பேரண்டம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய பரந்தவெளி ஆகும்.
(ii) இப்பேரண்டம் கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியதாகும்.
(iii) இப்பேரண்டத்தின் துல்லியமான அளவு இன்னும் அளவிடப்படவில்லை.
(iv) இவை வெளிப்புறமாக விரிவடைந்துகொண்டே செல்கின்றன.
சூரியக் குடும்பம்