1 ஆம் வகுப்பு தமிழ் - பருவம் 2 - என் நினைவில்
என் நினைவில்
ஐலசா! ஐலசா!

அந்திமல்லி பூத்திருக்கு
ஆலமரம் காத்திருக்கு
இலவம்பஞ்சு வெடிச்சிருக்கு
ஈச்சமரம் காய்ச்சிருக்கு
உற்சாகமாய்க் கூடிடுவோம்
ஊரெல்லாம் சுற்றிடுவோம்
எருக்கம்பூவில் தேனெடுப்போம்
ஏரு பூட்டப் பார்த்திடுவோம்
ஐலசா... ஐலசா ...
ஐலசா... ஐலசா ...
ஒன்று இரண்டு கத்துக்குவோம்
ஓடி ஆடிப் பாடிடுவோம்
ஔவை மொழியை அறிந்திடுவோம்
அதன்படியே வாழ்ந்திடுவோம்
கண்டுபிடிப்பேன்; வண்ணமிடுவேன்; எழுதுவேன்

யார்? யார்? என்ன செய்கிறார்கள்? பேசுவேன்.
எ.கா: 'ச்' தலைகீழாக நிற்கிறார்

நில்! கவனி! செய்!
