1 ஆம் வகுப்பு தமிழ் : அதோ பாராய் !
பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)
அதோ பாராய் !

குதித்துக் குதித்தே ஓடும்
குதிரை அதோ பாராய்
அசைந்து அசைந்து செல்லும்
ஆனை இதோ பாராய்
பறந்து பறந்து போகும்
பருந்து அதோ பாராய்
நகர்ந்து நகர்ந்து செல்லும்
நத்தை இதோ பாராய்
தத்தித் தத்திப் போகும்
தவளை அதோ பாராய்
துள்ளித் துள்ளிநாமும்
பள்ளிசெல்வோம் வாராய்