பருவம் 2 இயல் 2: விமானத்தில் பறக்கலாம்! - பகுதி 2
1 ஆம் வகுப்பு தமிழ் | Term 2 Chapter 2: Vimanathil Parakalam - Part 2
எங்கே போறீங்க?

கிளியக்கா கிளியக்கா
எங்கே போறீங்க?
கிளையிலே பழமிருக்கு
கொத்தப் போறேங்க!
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
எங்கே போறீங்க?
சின்னச்சின்ன நெல்மணியைத்
தேடிப் போறேங்க!
ஆத்துமீனே ஆத்துமீனே
எங்கே போறீங்க?
அருவியிலே நீச்சலடிச்சிப்
பார்க்கப் போறேங்க!
மயிலக்கா குயிலக்கா
எங்கே போறீங்க?
மதுரைக்குத்தான் குதிரையேறிப்
போகப் போறோங்க!
பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

எழுத்தை எடுப்பேன்; பெயரைச் சொல்வேன்

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்ட மிடுவோம்

படிப்போம்; இணைப்போம்
நீச்சல், மீன், கீரி, சீரகம்

எழுதிப் பழகுவேன்

படிப்போம்: எழுதுவோம்
மீதி வீதி
சீரகம் பீரங்கி நீச்சல்
மீன் விண்மீன்
இளநீர் பன்னீர் தண்ணீர்
மீன் பார் பன்னீர் மலர் தண்ணீர் பிடி

படிப்பேன்: வரைவேன்
மீன்
விண்மீன்
சீத்தாப்பழம்
இளநீர்

நிரப்புவேன்
நீச்சல்
மீன்

தவறு என்ன? கண்டுபிடித்து எழுதுவேன்

தண்ணீர்
இளநீர்
சொல் உருவாக்குவேன்


விடை
மிதி மீதி
நிதி நீதி
நிலம் நீலம்
கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்: இணைப்பேன்
கண்ணாடியில் தெரியும் சொற்களைப் படங்களுடன் பொருத்துக.

விடைகள் (Answers)
(i) மயில்
(ii) சிப்பி
(iii) இளநீர்
(iv) கீரி
அட! இளநீர்

அட! இளநீர்
வா பார்க்கலாம்
ம்ம்ம்...
தண்ணீர் உள்ளதா?
இந்தா, பிடி
ஆமாம்.. ஆமாம்..
ம்.. இனிப்பானி நீர்
இணைத்துச் சொல்வோம்

சொடக்கு போட்டுச் சொல்வோம்.

ஆசிரியர் குறிப்பு:
குழு 1: கையை நீட்டிக்கோ
கண்ணை மூடிக்கோ
சொடக்கு போட்டுக்கோ
ஒன்றா? இரண்டா?
குழு 2: என்ன எழுத்து?
❖ மேற்கண்ட வரிகளைப் பாடல் போல் குழந்தைகளைப் பாடச் செய்க.
❖ முதல் குழு 'க' என்று கூறினால் இரண்டாம் குழுவினர் ஒரு சொடக்கு போடுவர்.
❖ முதல் குழு 'கா' என்றால் இரண்டாம் குழுவினர் இரண்டு சொடக்கு போடுவர்.
❖ அடுத்து இரண்டாம் குழுவினர் பாடல் வரிகளையும் எழுத்தையும் கூற முதல் குழுவினர் உரிய எண்ணிக்கையில் சொடக்கு போடுவர்.