1st Grade EVS: Unit 3 - Transport | Samacheer Kalvi Tamil Medium Guide

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - அலகு 3: போக்குவரத்து

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 3 அலகு 3

போக்குவரத்து

பாடத் தலைப்பு: போக்குவரத்து

கற்றல் நோக்கங்கள்

கற்போர்

❖ பல்வேறு காலங்களில் வளர்ச்சி அடைந்த போக்குவரத்தின் வகைகளை அறிந்து கொள்ளுதல்.

❖ சாலைப் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுதல்.

போக்குவரத்து கற்றல் நோக்கங்கள்

நாம் கலந்துரையாடுவோமா!

நீங்கள் எந்தெந்த வகையான வாகனங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள்?

பல்வேறு வாகனங்களின் படம்

போக்குவரத்து என்பது மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வதற்கும் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் உதவுவது ஆகும்.

போக்குவரத்து வாகனங்கள்

இன்று நாம் சாலைகளில் பயணம் செய்வதற்கு துள்ளுந்து, மூவுருளி, மகிழுந்து, பேருந்து, சிற்றூர்தி, தொடர்வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். பேருந்து மற்றும் சிற்றூர்தியை விட தொடர்வண்டியில் அதிக மக்கள் பயணம் செய்யலாம். ஆகாயத்தில் பயணம் செய்ய வானூர்தி மற்றும் உலங்கு வானூர்தியும் (ஹெலிகாப்டர்) நீரில் பயணம் செய்ய கப்பல், படகு போன்றவற்றையும் பயன்படுத்துகிறோம்.

இந்த வாகனங்களைப் பயன்படுத்தி நீண்ட தூரத்திலுள்ள இடத்தைக் குறுகிய காலத்தில் அடையலாம். இவை எரிபொருள் (பெட்ரோல், டீசல்) மூலம் இயங்குகின்றன.

நீர், நில, வான்வழி போக்குவரத்து

தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டியும் அவசர ஊர்தியும் முக்கியத்துவம் வாய்ந்த வாகனங்களாகும். தீயணைப்பு வண்டி தீயை அணைக்கவும் அவசர ஊர்தி ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன.

இவ்வாகனங்களுக்கு எப்பொழுதும் முதலில் வழி விட வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு வண்டி

அவசர ஊர்தி

தீயணைப்பு வண்டி மற்றும் அவசர ஊர்தி

எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குக் (✔) குறியிடுவோமா!

வாகனங்களை அடையாளம் காணும் பயிற்சி

போக்குவரத்தின் கதை

முந்தைய காலங்களில் மனிதர்கள் நடந்தும் பல்லக்குகளைப் பயன்படுத்தியும் யானை மற்றும் குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தியும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணம் செய்தனர்.

பண்டைய கால போக்குவரத்து

மக்கள் அடர்ந்தகாடுகளில் பயணம் செய்வதற்கும் பொருள்களைச் சுமந்து செல்வதற்கும் யானைகள் பழக்கப்படுத்தப்பட்டன.

சக்கரம் கண்டுபிடிப்பு

பிறகு மனிதனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. சாலையில் எந்த ஒரு வாகனமும் சக்கரம் இல்லாமல் நகராது. மனிதன் சக்கரத்தைப் பயன்படுத்தி வண்டியை உருவாக்கினான். பின்னர் மக்கள் குதிரை, காளை மற்றும் கழுதை ஆகிய விலங்குகளை வண்டிகளில் பூட்டி சுமை ஏற்றிச் செல்லவும் பயணம் மேற்கொள்ளவும் பயன்படுத்தினர்.

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி

சக்கரத்தைப் பயன்படுத்தி தேர், மிதிவண்டி போன்றவை உருவாக்கப்பட்டன. பிறகு இன்று நாம் பார்க்கக்கூடிய வாகனங்களான மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி, மூவுருளி போன்றவை உருவாக்கப்பட்டன.

நவீன வாகனங்கள்

இரண்டு சக்கர வாகனங்களுக்கு நீல வண்ணமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு வண்ணமும் இடலாமா?

வண்ணம் தீட்டும் பயிற்சி

மிதிவண்டி

மிதிவண்டி

அனைவருக்குமே இந்த வண்டியை ஓட்டப் பிடிக்கும். உங்களால் அதை ஊகிக்க முடிகிறதா? ஆம்! அதுதான் மிதிவண்டி. மிதிவண்டி முந்தைய காலத்திலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு தற்பொழுது உள்ள நிலையை அடைந்துள்ளது.

மிதிவண்டியின் பரிணாம வளர்ச்சி

மிதிவண்டியின் பெயர்களை அதன் பாகங்களுடன் இணைப்போமா!

மிதிவண்டி பாகங்களை இணைக்கும் பயிற்சி

சாலைப் பாதுகாப்பு

நாம் சாலையைக் கடக்கும் போது சாலை விதிகளைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.

சாலை பாதுகாப்பு விதிகள்

1. போக்குவரத்து சமிக்ஞைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

❖ சிவப்பு - நில்

❖ மஞ்சள் - தயாராக இரு

❖ பச்சை - செல்

போக்குவரத்து விளக்குகள்

2. எப்பொழுதும் நடைபாதையில் நடக்க வேண்டும்.

நடைபாதையில் நடத்தல்

3. சாலையைக் கடக்க பாதசாரிகள் கடக்கும் கோட்டினைப் (Zebra crossing) பயன்படுத்த வேண்டும். பச்சை விளக்கில் மனித உருவம் தெரியும் போது மனிதர்கள் சாலையைக் கடக்க வேண்டும்.

பாதசாரிகள் கடக்கும் கோடு

4. ஒருபோதும் வாகனங்களுக்குப் பின் ஒளிந்து கொள்ளக் கூடாது.

தவறான செயல் தவறான செயல்

5. ஒருபோதும் சாலையில் ஓடவோ, விளையாடவோ கூடாது.

சிந்தித்து விடையளி.

பாதசாரிகள் கடக்கும் கோட்டினை ஆங்கிலத்தில் "Zebra crossing" என அழைக்கிறோம். ஏன்?

வரிக்குதிரை

சரியான விடையை (✔) குறியிட்டுக் காட்டுவோமா!

1. சாலையில் மஞ்சள் / பச்சை✔ விளக்கு எரியும் பொழுது வாகனங்கள் செல்ல வேண்டும்.

2. நடந்து செல்வதற்கு நடைபாதை✔ / சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

3. சாலையைப் பாதசாரிகள் கடக்கும் கோட்டில் மட்டுமே கடக்க வேண்டும்✔ / எந்த இடத்தில் வேண்டுமானாலும் கடக்கலாம்.