1st Maths Term 2 Unit 2 Numbers: Addition Explained | எண்கள் | வகுப்பு 1 கணக்கு பருவம் 2

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 2 அலகு 2 - எண்கள் (கூட்டல்)

Numbers | Term 2 Unit 2

1 ஆம் வகுப்பு கணக்கு - கூட்டல்

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 2 : எண்கள்

கூட்டல்

கூட்டல் ( 20-க்கு மிகாமல் )

கலைச் சொற்கள்

கூட்டல், மொத்தம், ஒட்டுமொத்தம், அதிகம்

நினைவு கூர்க

கூடுதல் 9-க்கு மிகாமல்

பூங்கா காட்சி

ஊஞ்சலில் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை = 2

சறுக்கலில் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை = 1

மொத்தம் = 3

ஆசிரியருக்கான குறிப்பு:

மேற்கண்ட படத்திலிருந்து கூடுதல் 9-க்கு மிகாமல் மேலும் சில கூட்டல் கணக்குகளைக் கேட்கலாம்.

கூட்டுக

கூட்டல் பயிற்சி

5 + 1 = 6

3 + 3 = 6

2 + 7 = 9

2 + 3 = 5

1 + 6 = 7

4 + 5 = 9

கற்றல்: பூச்சியத்துடன் கூட்டல்

பூச்சியத்துடன் கூட்டல் விளக்கம்

கூடுதலாக அறிவோம்

பூச்சியத்தை எந்த ஓர் எண்ணுடன் கூட்டினாலும், அதே எண் கிடைக்கும்.

செய்து பார்: வரைந்து கூட்டுக.

பூச்சியத்துடன் கூட்டும் பயிற்சி

1 + 0 = 1

0 + 2 = 2

0 + 3 = 3

4 + 0 = 4

5 + 0 = 5

0 + 6 = 6

7 + 0 = 7

0 + 8 = 8

9 + 0 = 9

விளையாட்டு

காகிதக் கோப்பை விளையாட்டு

படத்தில் காட்டியுள்ளபடி காகிதக் கோப்பைகளை அடுக்கி வைக்கவும். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பந்தை வீசி காகிதக் கோப்பைகளைக் கலைக்க, ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டுவாய்ப்புகள் வழங்கவும். ஒவ்வொரு வாய்ப்பிலும் எத்தனை கோப்பைகள் கலைக்கப்பட்டது என்பதைக் குறிக்கவும். இரண்டு வாய்ப்புகளிலும் கலைக்கப்பட்ட கோப்பைகள் மொத்தம் எத்தனை என வினவ வேண்டும்.

முதல் வாய்ப்பில் கலைக்கப்பட்ட கோப்பைகள் = 4

இரண்டாம் வாய்ப்பில் கலைக்கப்பட்ட கோப்பைகள் = 5

மொத்தம் = 9

பயணம் செய்வோம்: மரங்கள்! எத்தனை மரங்கள்?

பள்ளிக்குச் செல்லும் வழி

மணியும் கனியும் அண்டை வீட்டில் வசிப்பவர்கள். அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து ஒன்றாகவே பள்ளிக்குச் செல்வர். ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில், மணி தனக்கு வலது பக்கத்தில் சாலையோரம் உள்ள மரங்களை எண்ணி, 7 மரங்கள் என்றான். கனியும் தனது இடது பக்கத்தில் சாலையோரம் உள்ள மரங்களை எண்ணி, 5 மரங்கள் என்றாள். அவர்கள் இருவரும் பள்ளியை அடைந்ததும் தங்களது தோழியான செல்வியிடம் இந்த நிகழ்வைக் கூறினர்.

செல்வி, மணி மற்றும் கனி ஆகிய இருவரும் எண்ணிய மொத்த மரங்களின் எண்ணிக்கை 12 எனக் கூறினாள். மணியும் கனியும் செல்வியின் பதிலைக் கண்டு வியந்து “எப்படிக் கூறினாய்?“ எனக் கேட்டனர். உடனே

செல்வி கீழ்க்கண்டவாறு விவரித்தாள்.

செல்வியின் விளக்கம்

மணி எண்ணிய மரங்களின் எண்ணிக்கை = 7 | | | | | | | (7 கோடுகள் வரைக)

கனி எண்ணிய மரங்களின் எண்ணிக்கை = 5 | | | | | (5 கோடுகள் வரைக)

மொத்தம் = 12 | | | | | | | | | | | | (மொத்தக் கோடுகளைப் பத்தாகத் தொகுக்க)

கற்றல்: கூட்டல்

கோடுகளைப் பயன்படுத்திக் கூட்டல். மணிகளைப் பயன்படுத்திக் கூட்டல்.

கோடுகள் மற்றும் மணிகள் கொண்டு கூட்டல்

செய்து பார்: கூட்டுக

கூட்டல் பயிற்சி

மகிழ்ச்சி நேரம்

அட்டவணையில் உள்ள எண்களின் கூடுதலைக் காண்க. கிடைக்கும் விடைக்கேற்ற வண்ணத்தை மயிலின் தோகையில், உரிய இடத்தில் தீட்டுக.

மயில் வண்ணமிடும் பயிற்சி

நீயும் கணித மேதைதான்

கூடுதல் 12 வருமாறு எண் இணைகளைச் சேர்க்க.

கூடுதல் 12 வரும் இணைகள்

கூடுதல் 20 வருமாறு எண் இணைகளைச் சேர்க்க.

கூடுதல் 20 வரும் இணைகள்

மனக் கணக்கு: கூட்டல்

● அரசியிடம் 9 பென்சில்களும், கமலாவிடம் 8 பென்சில்களும் உள்ளன எனில், இருவரிடமும் ஒட்டுமொத்தமாக உள்ள பென்சில்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 9 + 8 = 17

● மேரி 7 மாம்பழங்களையும், அகல்யா 6 மாம்பழங்களையும்பறித்து ஒரேகூடையில் வைத்தனர் எனில், கூடையில் உள்ள மொத்த மாம்பழங்கள் எத்தனை?

விடை: 7 + 6 = 13

● செழியனின் வயது 12. அவன் சகோதரியின் வயது அவனை விட 3 அதிகம் எனில், சகோதரியின் வயது என்ன?

விடை: 12 + 3 = 15

● சமீரா 8 வண்ணம் தீட்டும் குச்சிகள் வைத்திருந்தாள். மேலும் 4 வண்ணம் தீட்டும் குச்சிகள் வாங்கினாள் எனில், அவளிடம் உள்ள வண்ணம் தீட்டும் குச்சிகள் மொத்தம் எத்தனை?

விடை: 8 + 4 = 12