அமைப்புகள்: பருவம் 2 அலகு 3
1 ஆம் வகுப்பு கணக்கு
வடிவங்களில் அமைப்புகள்
கலைச் சொற்கள் : உடல் அசைவுகள், அமைப்புகள்
பயணம் செய்வோம்
படத்தை உற்றுநோக்குக.

ஆசிரியர் மேற்கண்ட படம் தொடர்புடைய வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டலாம். எடுத்துக்காட்டாக:
1. படத்தில் நீ காணும் வடிவங்களின் பெயர்களைக் கூறுக.
பதில்: சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம்
2. வடிவங்களை எங்கெல்லாம் காண்கிறாய்? அவை எப்படி அமைந்துள்ளன?
பதில்: சுவர் சாயம், கோலம், கொடிகள், நுழைவு செடி. மீண்டும் மீண்டும் மாதிரி முறை.
கற்றல்
வடிவங்களின் அமைப்பை உற்றுநோக்கி, நிறைவு செய்க.

செயல்பாடு
வகுப்பறையை அழகுபடுத்துவோமா!

- கொடுக்கப்பட்டுள்ளவை போல் வடிவங்களைத் தேவையான எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும்.
- கீழே கொடுத்துள்ளபடி வண்ண வரைபடத்தாளில் (chart), நீளமான பட்டையை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- பட்டையையும், வடிவங்களையும் கொண்டு உனக்குப் பிடித்த அமைப்பில் தோரணம் உருவாக்குக.

ஆசிரியரின் துணையுடன் நீ உருவாக்கிய தோரணத்தைக்கொண்டு வகுப்பறையை அழகுபடுத்துக.
கூடுதலாக அறிவோம்
வண்ணக்கோலம்

வெவ்வேறு அமைப்பில் வடிவங்களை வரைந்து வண்ணக் கோலம் உருவாக்குக.
மகிழ்ச்சி நேரம்
ஒத்த அமைப்புடன் பொருத்துக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளை உற்றுநோக்கி, இடது புறத்தில் உள்ள அமைப்புடன் பொருந்தக்கூடிய வலது புறத்தில் உள்ள அமைப்பைக் கண்டுபிடித்துப் பொருத்துங்கள்.
