Class 1 EVS Term 1 Unit 3: Nature's Bounty | Samacheer Kalvi

Class 1 EVS Term 1 Unit 3: Nature's Bounty | Samacheer Kalvi

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் | பருவம் 1 | அலகு 3

இயற்கையின் கொடை

1st EVS Environmental Science : Term 1 Unit 3 : Nature's Bounty

கற்றல் நோக்கங்கள்

இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவற்றை உற்றுநோக்கல். அடையாளம் காணுதல்.

பெயரறிதல், விவரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்.

இயற்கையின் கொடை தலைப்பு

செல்வி ஒருநாள் தன் வீட்டருகே உள்ள தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே ஒரு தக்காளிச் செடியில் அழகான மஞ்சள் நிறப் பூவைக் கண்டாள். உடனே அதனைப் பறிக்க முயன்றாள். அப்போது அங்கு வந்த தேனீ ஒன்று "அது என்னுடைய உணவு விட்டுவிடு" என்றது.

தேனீ மற்றும் தக்காளிப் பூ

வியப்படைந்த செல்வி செடியில் சிவப்பு நிறத் தக்காளியைக் கண்டதும் அதைப் பறிக்க முயன்றாள். அப்போது பச்சைக்கிளி ஒன்று பறந்துவந்து "அது எனக்கான உணவு விட்டுவிடு" என்றது.

பச்சைக்கிளி மற்றும் தக்காளி

செல்வி பச்சைக்கிளிக்காகத் தக்காளியை விட்டுவிட்டு. பின் தக்காளிச் செடியின் இலையை வருடினாள். அப்போது அங்கு வந்த வெட்டுக்கிளி "அது எனக்கான உணவு, தயவு செய்து இலையைப் பறிக்காதே" என்றது. தாவரங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன என்று அப்போதுதான் செல்விக்குப் புரிந்தது.

வெட்டுக்கிளி மற்றும் தக்காளி இலை

உடனே "நீதான் எங்கள் அனைவருக்கும் உணவு தருகின்றாய் மிக்க நன்றி" என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே தக்காளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள் செல்வி.

செல்வி செடிக்கு தண்ணீர் ஊற்றுதல்

இலைகள்

கதை பிடித்ததா குழந்தைகளே! நாம் த தற்போது தாவர உலகத்திற்குள் பயணிப்போமா?

நாம் பேசுவோமா!

தாவரங்கள் பல்வேறு வகையான இலைகளைக் கொண்டுள்ளன. இலைகள் பல்வேறு அளவு, வடிவம், வண்ணம் மற்றும் தன்மைகளில் உள்ளன. உங்களைச் சுற்றிக் காணப்படும் இலைகளில் நீங்கள் பார்த்த இலைகளைப் பற்றிப் பேசலாமா!

பல்வேறு வகையான இலைகள்

சொற்களஞ்சியம்

வெளிர் பச்சை, கரும் பச்சை, மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, விளிம்புடைய, கூர்மையான, வட்டமான, உலர்ந்த, பெரிய, சிறிய, நுனி.

நீ அறிந்த வார்த்தைகளைக் கொண்டு இலைகளை வேறுபடுத்துவோமா!

இலைகளை வேறுபடுத்துதல்

இலையின் மேல் தேய்த்தல் – இலைகளின் மேல் வண்ண மெழுகுப் பென்சிலால் தேய்த்து அதன் அமைப்பை உருவாக்குவோமா!

இலை தேய்த்தல் செயல்பாடு

பச்சை இலை ஒன்றை வகுப்பிற்கு கொண்டு வரவும். அந்த இலையில் ஏற்படும் மாற்றத்தை ஒரு வாரம் வரை தினமும் உற்றுநோக்குவோமா!

இலை காய்ந்து போதல்

பூக்கள்

படங்களைப் பார். இவை நம்மைச் சுற்றிலும் காணப்படும் சில பூக்கள். அவற்றின் பெயர்களைச் சொல்வோமா!

பல்வேறு வகையான பூக்கள்

உங்களுக்குப் பிடித்த பூ எது? அப்பூவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்வீர்களா!

பதில்: எனக்கு மல்லிகை பூ பிடிக்கும்.

அதன் இதழ்கள் மிகவும் மென்மையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.

இதழ்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

சொற்களஞ்சியம்

மணம், இதழ், மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, முட்கள், வண்ணம், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள்.

சிலபூக்களுக்கு மணம் உண்டு.

செண்பகப்பூ, மல்லிகைப்பூ, ரோஜாப்பூ

மணம் உள்ள பூக்கள்

பூ வாடாமல் இருக்க வேண்டுமெனில் படத்தில் உள்ளது போல் செய்யலாம்.

பூக்களை வாடாமல் வைத்திருத்தல்

பூக்கள் பல்வேறு வகையான இதழ்களைக் கொண்டுள்ளன. இதழ்களின் வடிவங்களை உற்றுநோக்கவும்.

இதழை உரியபூவுடன் இணைக்கலாமா!

பூ மற்றும் இதழ் பொருத்துக

காய்கறிகள்

பாடல் நேரம்

காய்கறிகள் பாடல்

சின்னச் சின்ன சுண்டைக்காய்
குண்டு குண்டுக் கத்தரிக்காய்
நெட்டை நெட்டை முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்
கொடியிலே பூசணிக்காய்
கொத்துக் கொத்தாய் அவரைக்காய்
வழ வழக்கும் வெண்டைக்காய்
வளமான வாழைக்காய்
பட்டை போட்ட பீர்க்கங்காய்
பாங்கான வெள்ளரிக்காய்
இத்தனையும் வேண்டுமா?
இன்றே தோட்டம் அமைத்திடுவோம்!
இயற்கை வளம் காத்திடுவோம்!

நாம் பேசுவோமா!

நாம் அனைவரும் காய்கறிகளை உண்கிறோம். காய்கறிகள் நம் உடலுக்கு நலத்தையும் வலிமையையும் அளிக்கின்றன.

உங்களுக்கு எந்தெந்தக் காய்கறிகளைப் பிடிக்கும்?

உங்களால் அவற்றை விவரிக்க முடியுமா?

இதோ உங்களுக்கு உதவ சில வார்த்தைகள்.

சொற்களஞ்சியம்

மிருதுவான, சொரசொரப்பான, பெரிய, சிறிய, அளவு, வடிவம், கனமான, இலேசான, சுவையான, நீர்ச்சத்துள்ள, கடினமான, வட்டமான, நீளமான, பழுப்பு, ஆரஞ்சு, பச்சை, சிவப்பு, ஊதா.

காய்கறிகள் எவ்வளவு அழகாக அடுக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தாயா!

நாம் இங்கு முட்டைக்கோஸ், தக்காளி, வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் கேரட் போன்ற பல காய்கறிகளைப் பார்க்கிறோம். அவற்றை நாம் அடையாளம் காண்போமா?

காய்கறி அங்காடி

காய்கறி அங்காடி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய்

தினசரி பயன்படுத்தும் காய்கறிகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கத்தரிக்காயின் பல்வேறு வகைகளைப் பார்க்கவும்.

பல்வேறு வகை கத்தரிக்காய்கள்

காய்கறி மனிதனை உற்றுநோக்கு. எந்தெந்தக் காய்கறிகளால் காய்கறி மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான் என்பதை அடையாளம் காண். அவற்றை நீங்கள் கற்றறிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விவரி. மேலும் பின்வரும் வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

காய்கறி மனிதன்

எந்தெந்தக் காய்கறிகள் கடினமாக உள்ளன?

பூசணிக்காய்

எந்தக் காய்கறி நீளமாகவும் பச்சையாகவும் உள்ளது?

புடலங்காய்

எந்தக் காய்கறி ஆரஞ்சு நிறத்தில் உள்ளது?

கேரட்

காய்கறிகளைக் கொண்டு அச்சிடுதல்.

வெண்டைக்காயால் அச்சிடுதல், குடைமிளகாயால் அச்சிடுதல், கேரட்டால் அச்சிடுதல், எலுமிச்சையால் அச்சிடுதல்

காய்கறி அச்சிடுதல்

பழங்கள்

பழங்கள்

பழங்கள் நமக்கு உடல்நலத்தை அளிக்கின்றன. பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன.

சொற்களஞ்சியம்

கனி, சாறு மிகுந்த, சதைப்பற்றுமிக்க, சிறிய, பெரிய, இனிப்பு, புளிப்பு, உலர்பழங்கள்.

பெரும்பாலான காய்கள் கனியாக மாறும் போது நிறம் மாறுகின்றன.

காய் கனியாக மாறுதல்

சில பழங்கள் சதைப்பற்றுள்ளவை.

பப்பாளி, சப்போட்டா

சதைப்பற்றுள்ள பழங்கள்

சில பழங்கள் சாறு மிகுந்தவை.

எலுமிச்சை, தர்பூசணி, ஆரஞ்சு

சாறு மிகுந்த பழங்கள்

சில பழங்கள் சிறியவை.

திராட்சை, இலந்தை

சிறிய பழங்கள்

சில பழங்கள் பெரியவை.

தர்பூசணி, பலாப்பழம்

பெரிய பழங்கள்

சில பழங்கள் புளிப்புச் சுவை உடையவை.

எலுமிச்சை, நெல்லிக்காய்

புளிப்புச் சுவையுள்ள பழங்கள்

சில பழங்கள் இனிப்புச் சுவை உடையவை.

வாழைப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டாப்பழம்

இனிப்புச் சுவையுள்ள பழங்கள்

சில பழங்கள் இனிப்புச் சுவையும் புளிப்புச் சுவையும் கலந்தவை.

திராட்சை, அன்னாசி

இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுள்ள பழங்கள்

சில பழங்கள் உலர்ந்தவை.

பேரீச்சை, திராட்சை, அத்தி

உலர் பழங்கள்

உங்களுக்குத் தெரியுமா?

பறவைகளும் அணிலும் பழங்களை விரும்பி உண்ணும்.

பழங்களை உண்ணும் பறவை மற்றும் அணில்

பழத்தை பழத்துண்டுடன் இணைப்போமா!

பழம் மற்றும் பழத்துண்டு பொருத்துக

படங்களுக்குச் சரியான எண்கள் இட்டு வரிசைப்படுத்துவோமா!

பழங்கள் பழத்தோட்டத்தில் விளைந்து எவ்வாறு நம் வீட்டை வந்தடைகின்றன?

பழங்களின் பயணம் வரிசைப்படுத்துதல்

இந்தப் படத்திலிருந்து நீங்கள் அறிவதென்ன?

பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் எப்பொழுதும் கழுவ வேண்டும்.

பழங்களைக் கழுவுதல்