Class 1 EVS Term 3 Unit 2 Our Neighbourhood | Samacheer Kalvi

Class 1 EVS Term 3 Unit 2: Our Neighbourhood | Samacheer Kalvi

பருவம் 3 அலகு 2: நமது சுற்றுப்புறம்

1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்

கற்றல் நோக்கங்கள்

கற்போர்

கற்றல் நோக்கங்கள்

❖ அண்டை அயலார் பற்றி விவரித்தல்

❖ வெவ்வேறு வாழிடங்களைப் பற்றி அறிதல்

❖ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல்

நமது சுற்றுப்புறம்

நமது சுற்றுப்புறம் தலைப்பு

பூஞ்சோலை ஓர் அழகிய நகரம். அங்கு சீனு தன்பெற்றோருடன் வசித்து வருகிறான். அவன் தன் வீட்டு முகப்பு மாடத்திலிருந்து சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறான். அவன் எவற்றை எல்லாம் பார்க்கிறான்?

படத்தை உற்றுநோக்கி கலந்துரையாடவும். இதே போல் உன் சுற்றுப்புறத்தைப் பற்றி பேசுவோமா!

சீனுவின் சுற்றுப்புறம்

நமது வீட்டைச்சுற்றியுள்ள இடங்களை நமது சுற்றுப்புறம் என்கிறோம். நம் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களை அண்டை அயலார் என்கிறோம். அவர்கள் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

ஆசிரியர் குறிப்பு

நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் நமது சுற்றுப்புறத்திலேயே கிடைக்கும்.

நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மரங்களும் விலங்குகளும் நம் சுற்றுப்புறத்தின் ஓர் அங்கமே.

வட்டத்திற்குள் உள்ள பொருள்களை அவற்றுடன் தொடர்புடைய இடங்களுடன் இணைக்க.

பொருத்துதல் பயிற்சி

வாழிடங்கள்

சீனு : நமது உறவினர்களான ராம், ரம்யா, ரேகா, ராகவ், ரகு எங்கே வசிக்கிறார்கள்?

சீனு

அம்மா : அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் இடங்களை நான் உனக்குப் படத்தில் காண்பிக்கிறேன்.

"ராம் கிராமத்தில் வசிக்கிறான். இது அவனுடைய வீடு. அவன் வீட்டில் பசுக்களும், கோழிகளும் உள்னை. அவளது வீட்டின் பக்கத்தில் மாட்டுக் கொட்டகை உள்ளது".

கிராமத்து வீடு

"ரம்யாவும் கிராமத்தில் வசிக்கிறாள். அவன் வீட்டிற்குப் பின்புறம் காய்கறித் தோட்டம் உள்ளது".

காய்கறித் தோட்டம்

ரேகா நகரத்தில் உள்ள ஒரு பெரிய உயர்ந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் வசிக்கிறாள். அவளுக்கு தன் செல்லப் பிராணியான நாயை வளர்ப்பது மிகவும் பிடிக்கும்".

நகரத்து வீடு

சீனு : ''அம்மா! எனக்கும் வளர்க்க ஒரு நாய் வேண்டும்".

அம்மா : சரி, சீனு.

அம்மா : "ராகவ் ஒரு மலைப்பாங்கான பகுதியில் வசிக்கிறான். அவனுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் வீட்டின் முன்புறம் அழகான பூந்தோட்டம் உள்ளது".

மலைப்பாங்கான வீடு

"ரகு ஓர் ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்கிறான். அவனது வீட்டைச் சுற்றி பல தென்னை மரங்கள் உள்ளன".

ஆற்றங்கரை வீடு

சீனு : "எனக்கு சலசலவென்ற ஆற்றின் ஒலி மிகவும் பிடிக்கும்".

நமது வீடுகளை எப்போதும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும். வீடு வெயில், குளிர், மழை, புயல், காட்டு விலங்குகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

நமது முகவரியை எழுதக் கற்றுக் கொள்ளலாமா!

பெயர் : ---------------------

கதவு எண் : ---------------------

தெவின் பெயர் : ---------------------

கிராமம்/நகரம்/மாநகரம் பெயர் : ---------------------

கிராமமும் நகரமும்

கிராமம் மற்றும் நகரத்தின் படங்களை உற்றுநோக்கி நாம் பார்த்தவற்றைப் பற்றி பேசுவோமா! என்ன வேறுபாடுகளை நீ காண்கிறாய்?

கிராமம்

கிராமம்

நகரம்

நகரம்

நகரத்திலும் கிராமத்திலும் பொதுவாகக் காணப்படும் மூன்று இடங்களில் நீல நிற ( ☆ ) நட்சத்திரக் குறியை வரைவோமா!.

கிராமத்தில் நீ பள்ளியிலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியில் என்னென்ன இடங்களைப் பார்க்கிறாய்?

கிராமத்தில் இல்லாமல் நகரத்தில் மட்டும் காணப்படும் மூன்று இடங்களில் சிவப்பு நிற (☆) நட்சத்திரக் குறியை வரைவோமா!

நகரத்தில் நீ பார்க்கும் இடங்களின் பெயர்களைக் கூறுவோமா!

திசைகள்

படத்தை உற்றுநோக்கிப் பேசுவோமா!

திசைகள்

புள்ளிகளை இணைத்து திசைகளின் பெயர் கூறுவோமா!

திசைகள் பயிற்சி

ஆசிரியருக்கான குறிப்பு:

மாணவர்கைள் தங்களின் வலது, இடது, முன் மற்றும் பின்புறம் அமர்ந்திருக்கும் மாணவரின் பெயரினைக் கூறச் செய்தல்.

பாதுகாப்பு வழிமுறைகள்

பள்ளியில் பாதுகாப்பு

(i) பென்சிலைக் கூர்மையாக்கும் கருவியைப் பயன்படுத்தி கூர்மையாக்க வேண்டும். பிளேடு பயன்படுத்தக் கூடாது.

(ii) பேருந்திற்குள் ஏற வரிசை முறையினைப் பின்பற்ற வேண்டும்.

(iii) இயங்கும் பேருந்தினுள் இருக்கும் போது உங்கள் கை அல்லது தலையை வெளியே நீட்ட வேண்டாம்.

(iv) மேசை நாற்காலிகளின் மேல் ஏறி விளையாட வேண்டாம்.

(v) ஓருவருக்கொருவர் தீங்கு செய்ய வேண்டாம்.

பள்ளி பாதுகாப்பு

வீட்டில் பாதுகாப்பு

(i) கத்தி, பிளேடு போன்ற கூர்மையான பொருள்களைக் கொண்டு விளையாடக் கூடாது.

(ii) மூக்கு, காதினுள் எந்தப் பொருளையும் நுழைக்கக் கூடாது.

(iii) ஒருபோதும் கைகளில் இலை குச்சி போன்றவற்றைக் கொண்டு மின் பொத்தான்களை செருகல்களைத் தொடவோ/ செருகவோ கூடாது.

(iv) படிக்கட்டுகளின் கைப்பிடியிலும் முகப்பு மாடத்திலும் விளையாடக் கூடாது.

(v) அடுப்பின் அருகில் விளையாடக் கூடாது சமையலறையில் தலைமுடியை வாருதல் கூடாது.

(vi) எந்த பூச்சியையும் பிடிக்கக்கூடாது.

(vii) ஒருபோதும் நெருப்புடன் விளையாடக் கூடாது.

வீட்டில் பாதுகாப்பு

பாதுகாப்பான செயலுக்கு (✔) குறியும் பாதுகாப்பற்ற செயலுக்கு (X) குறியும் இடுவோமா!

பாதுகாப்பு பயிற்சி