Class 1 Maths Measurements: Comparisons | Term 2 Unit 4 | Samacheer Kalvi

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு - ஒப்பீடுகள்

1 ஆம் வகுப்பு கணக்கு: பருவம் 2 அலகு 4 - அளவைகள்

ஒப்பீடுகள்

கலைச் சொற்கள்

நீளமானது-குட்டையானது, தடிமனானது - மெல்லியது, உயரமானது - குட்டையானது, கனமானது - இலேசானது, அதிகம் - குறைவு

பயணம் செய்வோம்

படத்தை உற்றுநோக்குக.

பயணப் படம்

ஆசிரியருக்கான குறிப்பு

படத்தை உற்றுநோக்க வைத்து கலைச் சொற்களை அறிமுகப்படுத்தலாம்.

கற்றல்

நீளமானது-குட்டையானது

நீளமானது-குட்டையானது ஒப்பீடு

செய்து பார்

நீளமான காய்கறிக்கு வண்ணமும், குட்டையான காய்கறிக்கு வண்ணமும் தீட்டுக.

காய்கறிகளுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி

நீயும் கணித மேதைதான்

மரத்தின் மீதுள்ள பட்டத்தை எடுப்பதற்கு, அம்மா எந்தக் குச்சியைப் பயன்படுத்துவார்கள்? ஏன்?

பட்டத்தை எடுக்க குச்சி தேர்வு

கற்றல்

தடிமனானது-மெல்லியது

தடிமனானது-மெல்லியது ஒப்பீடு

செய்து பார்

தடிமனான புத்தகத்தை (✔) செய்க.

தடிமனான புத்தகத்தைத் தேர்வு செய்க

மெல்லிய சக்கரத்தை (✔) செய்க.

மெல்லிய சக்கரத்தைத் தேர்வு செய்க

முயன்று பார்

தடிமனான மெழுகுவர்த்திக்கு வண்ணமும், மெல்லிய மெழுகுவர்த்திக்கு வண்ணமும் தீட்டுக.

மெழுகுவர்த்திகளுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி

எந்த மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரியும்? ஏன்?

பதில்: தடிமனான மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரியும்.

கற்றல்

உயரமானது - குட்டையானது

உயரமானது-குட்டையானது ஒப்பீடு

செய்து பார்

உயரமான கட்டிடத்திற்கு வண்ணமும், குட்டையான கட்டிடத்திற்கு வண்ணமும் தீட்டுக.

கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி

எந்த கட்டிடத்திற்கு அதிக வண்ணம் தேவைப்படும்? ஏன்?

பதில்: உயரமான கட்டிடத்திற்கு அதிக வண்ணம் தேவை. உயரமான ஓவியப் பகுதி.

நீயும் கணித மேதைதான்

எந்த ஏணியைப் பயன்படுத்தி அலமாரியிலுள்ள சிவப்பு நிற புத்தகத்தை எடுக்கலாம்? ஏன்?

புத்தகத்தை எடுக்க ஏணி தேர்வு
பதில்: உயரமான ஏணியப் பயன்படுத்தி அலமாரியிலுள்ள சிவப்பு நிற புத்தகத்தை எடுக்கலாம். சிறிய ஏணி சிவப்பு புத்தகத்தை அடையும் அளவுக்கு உயரமாக இல்லை.

கற்றல்

கனமானது – இலேசானது

கனமானது-இலேசானது ஒப்பீடு

செய்து பார்

கனமான காய்கறிக்கு வண்ணமும், இலேசான காய்கறிக்கு வண்ணமும் தீட்டுக.

காய்கறிகளுக்கு எடைக்கேற்ப வண்ணம் தீட்டும் பயிற்சி

இக்கருத்திற்குத் தொடர்புடைய பழங்கள் இரண்டினைக் கூறுக.

பதில்: பலாப்பழம் கனமானது. மாம்பழம் லேசானனது.

நீயும் கணித மேதைதான்

சிறுவன் அமர்ந்துள்ள இடத்தில் சிறுவனுக்குப் பதிலாக அம்மா அமர்ந்தால், என்ன நிகழும்? ஏன்?

சீசா விளையாட்டு
பதில்: சிறுவன் மேலே செல்வாள். சிறுவனை விட அம்மா கனமானவள், அதனால் அது சிறுவனைத் தூக்கும்.

கற்றல்

அதிகம் - குறைவு

அதிகம்-குறைவு ஒப்பீடு

செய்து பார்

குறைந்த அளவு நீர் கொண்டுள்ள தண்ணீர் பாட்டிலை (✔) செய்க.

குறைந்த நீர் உள்ள பாட்டிலைத் தேர்வு செய்க

அதிக அளவு நீர் கொள்ளும் பாத்திரத்தை (✔) செய்க.

அதிக நீர் கொள்ளும் பாத்திரத்தைத் தேர்வு செய்க

நீயும் கணித மேதைதான்

பாலை முழுவதுமாக ஊற்றுவதற்கு இது சரியான பாத்திரந்தானா? ஏன்?

பால் ஊற்றும் பயிற்சி
பதில்: இல்லை, தம்ளர் முழு பாலை வைத்திருக்க முடியாது.

வரிசைப்படுத்துவோம்

மிக நீளமானதை (✔) செய்க.

மிக நீளமானதை வரிசைப்படுத்துக

செய்து பார்

மிகக் குட்டையானதை (✔) செய்க.

மிகக் குட்டையானதை வரிசைப்படுத்துக

மிக உயரமானதை (✔) செய்க.

மிக உயரமானதை வரிசைப்படுத்துக

ஆசிரியருக்கான குறிப்பு

நீளம், எடை, உயரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் திறனை மேலும் பல எடுத்துக்காட்டுகள் தந்து வலுப்படுத்தலாம்.