4th Maths Term 1 Unit 4 Measurements - Estimation (Tamil Medium)

4th Maths Term 1 Unit 4 Measurements - Estimation
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 4 : அளவைகள்

தோராயமாக்குதல்

Measurements | Term 1 Unit 4 | 4th Maths

நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.

தோராயமாக்குதல்

நீளம் மற்றும் தொலைவை அளந்து தோராயப்படுத்துதல்.

நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.

உதாரணமாக, ஒரு மீட்டர் என்பது நீ நேராக நிற்கும் போது உனது தோள்பட்டை முதல் பாதம் வரை உள்ள நீளமாகும்.

அட்டவணையை நிறைவு செய்க (நீளம்).

அட்டவணை செயல்பாடு - நீளம்

அட்டவணையை நிறைவு செய்க (தொலைவு).

அட்டவணை செயல்பாடு - தொலைவு
வரைபடத்தை உற்று நோக்கி கீழ்க்காண்பவற்றை நிறைவு செய்க.
மீராவின் வீடு மற்றும் இடங்களின் வரைபடம்
i. மீராவின் வீட்டிற்கும் பழக்கடைக்கும் இடையேயான மிகநீளமான தொலைவு 55 கி.மீ.
ii. மீராவின் வீட்டிற்கும் மீராவின் மாமா வீட்டிற்கும் இடையேயான மிக குறைந்த தொலைவு 30 கி.மீ.
iii. மீராவின் மாமா வீட்டிற்கும் சந்தைக்கும் இடையே மிக அதிக தொலைவு 48 கி.மீ.
iv. பள்ளிக் கூடத்திற்கும் பழக்கடைக்கும் இடைப்பட்ட தொலைவு 35 கி.மீ.
v. மீராவின் வீட்டிலிருந்து மிக அதிகமான தூரத்தில் உள்ள இடம் பழக்கடை.
vi. மீராவின் வீட்டிலிருந்து மிக குறைவான தூரத்தில் உள்ள இடம் சந்தை.
vii. மீராவின் வீட்டிக்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 20 கி.மீ.