4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
பயிற்சி 6.1 (முறையான பட்டியல்)
1. 9, 7, 2 ஆகிய மூன்று எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி எத்தனை மூன்று இலக்க எண்களை உருவாக்கலாம்? அவற்றைப் பட்டியலிடுக.
விடை:
972, 792, 279, 297, 729, 927 (6 வழிகளில்)
2. ஓர் உணவகத்தின் உணவு பட்டியலிலிருந்து நீங்கள் ஒரு சிற்றுண்டியையும் ஒரு பானத்தையும் தேர்வு செய்ய வேண்டுமெனில் உங்களால் எத்தனை தெரிவுகள் செய்ய முடியும்? அவற்றைப் பட்டியலிடுக.
விடை:
இட்லி − தேநீர், இட்லி – காபி, இட்லி – பால்
பூரி − தேநீர், பூரி – காபி, பூரி – பால்
தோசை – தேநீர், தோசை – காபி, தோசை − பால்
பொங்கல் – தேநீர், பொங்கல் – காபி, பொங்கல் − பால்
3. கவினிடம் நான்கு அட்டைகள் உள்ளது
i) இந்த அட்டைகளை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய மூன்று இலக்க எண்களைப் பட்டியலிடவும்
விடை:
974, 946, 976, 964, 947, 967
794, 746, 796, 764, 749, 769
497, 476, 469, 479, 467, 496
697, 679, 674, 647, 694, 649
ii) இந்த எண்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கக் கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க ஒற்றை எண் எது?
விடை:
9647
4. வேகமாக ஓடக்கூடிய A1, A2, A3, என்ற மூன்று பேர் உள்ளனர். எத்தனை வெவ்வேறு விதமான வழிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை அவர்களால் வெல்ல முடியும்? என்பதை பட்டியலிடுக.
விடை:
3 தடகளவீரர்
🡺 தங்கம் -- வெள்ளி – வெண்கலம்
🡺 வெள்ளி − வெண்கலம் – தங்கம்
🡺 வெண்கலம் − தங்கம் – வெள்ளி