4th Maths Term 1 Unit 6 Information Processing - Data Representation

4th Maths Term 1 Unit 6 Information Processing

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

4th Maths : Term 1 Unit 6 : Information Processing

சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை செவ்வக விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்.

சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை செவ்வக விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்.

அமிர்தாவிற்கு தனது வீட்டில் உள்ள எழுதுபொருள்களின் எண்ணிக்கையை எண்ணி வைக்கும் பணி ஒன்று கொடுக்கப்பட்டது. அவள் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் சிறிது நேரத்தில் எண்ணிக்கையை மறந்துவிட்டு கவலைப்பட்டாள். அப்போது அவளுடைய தோழி வாணி அவளுக்கு உதவ வந்தாள். அவள் முதலில் ஒவ்வொன்றாக வகைப்படுத்தினாள். பென்சில்கள், அழிப்பான்கள், அளவுகோல்கள், பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் கூராக்கி கருவி. இப்போது அமிர்தா அவற்றை எண்ணி கீழ்க்காணும் அட்டவணையில் எழுதுகிறாள்.

Amirtha Stationery Table
எடுத்துக்காட்டு

கலாவதி தன் பள்ளித் தோழர்களுக்குப் பிடித்த பானங்களைக் கணக்கெடுத்து பின்வரும் செவ்வக விளக்கப் படத்தில் குறிப்பிடுகிறார்.

Bar Graph of Drinks

i. குளம்பி (coffee) அருந்துபவர்களின் எண்ணிக்கை 40

ii. எந்த பானம் அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைவு?

(அ) குளம்பி (ஆ) தேநீர் (இ) பால்

iii. அதிகமானோரால் விரும்பப்பட்ட பானம் எது?

(அ) குளம்பி (ஆ) தேநீர் (இ) பால்
இவற்றை முயல்க

உங்கள் வகுப்பிலுள்ள மாணவர்கள் விரும்பும் விளையாட்டை பட்டியலிட்டு செவ்வக விளக்கப்படம் வரைக.