அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்
திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)
லிட்டர், மில்லி லிட்டரைக் கூட்ட, முதலில் லிட்டரை மில்லி லிட்டராக மாற்றுக.
சிவப்பு பெட்டிகளுக்கு மேலே உள்ள நீல பெட்டிகளில் உள்ள கூடுதல்கள் கிடைக்குமாறு, சிவப்பு பெட்டிகளில் 500 மிலி, 200 மிலி, 100 மிலி மற்றும் 50 மிலி ஐப் பயன்படுத்தி நிரப்புக.
திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)
லிட்டர், மில்லி லிட்டரைக் கூட்ட, முதலில் லிட்டரை மில்லி லிட்டராக மாற்றுக.
குறிப்பு: \( 1000 \text{ மிலி} = 1 \text{ லி} \)
கூட்டுக : \( 1 \text{ லி} + 345 \text{ மிலி} \)
கூட்டுக : \( 7 \text{ லி} + 9 \text{ மிலி} \)
கூட்டுக: \( 63 \text{ லி} \ 380 \text{ மிலி} \) மற்றும் \( 14 \text{ லி} \ 175 \text{ மிலி} \)
படி 1: மில்லி லிட்டரிலிருந்து ஆரம்பிக்க
\( 380 \text{ மிலி} + 175 \text{ மிலி} = 555 \text{ மிலி} \)
படி 2: பின்னர் லிட்டரைக் கூட்டவும்
\( 63 \text{ லி} + 14 \text{ லி} = 77 \text{ லி} \)