4th Std Maths Term 3 Unit 3 Measurements Exercise 3.1 Answers Tamil Medium

4th Maths Term 3 Unit 3 Exercise 3.1

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3

அளவைகள் (Measurements)

பயிற்சி 3.1 (திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்)
1. ராணியிடம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்தது. அதனை அவள் தன்னுடைய 5 நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுக்கொண்டாள் எனில், ஒவ்வொருவரும் எவ்வளவு பெறுவர்?
தீர்வு:
மொத்த எண்ணெயின் அளவு = 1 லிட்டர்
$$= 1000 \text{ மி.லிட்டர்}$$
பகிர்ந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை = 5
1 நபருக்கு கொடுக்கப்பட்ட எண்ணெயின் அளவு = $$1000 \div 5$$
$$= 200 \text{ மி.லி}$$
2. ஒரு தேநீர் கோப்பை 2 லிட்டர் தேநீரைக் கொண்டுள்ளது. 500 மிலி கொள்ளளவு கொண்ட கோப்பைகளில் ஊற்றப்படும் எனில், எத்தனை கோப்பைகளை நிரப்ப முடியும்?
Measurement Cup
தீர்வு:
மொத்த தேநீரின் அளவு = 2 லிட்டர்
$$= 2000 \text{ மி.லிட்டர்}$$
1 கோப்பையின் கொள்ளளவு = 500 மி.லி
கோப்பையின் எண்ணிக்கை = $$2000 \div 500$$
$$= 4 \text{ கோப்பைகள்}$$
3. ராமிடம் 1 லி பழச்சாறு நிரம்பிய புட்டி (bottle) இருந்தது, தன்னுடைய நண்பனுக்கு 100 மிலி பழச்சாறு கொடுத்தான் எனில், அவனிடம் மீதமிருக்கும் பழச்சாறு எவ்வளவு?
தீர்வு:
ராமிடம் உள்ள பழச்சாறின் கொள்ளளவு = 1 லிட்டர்
$$= 1000 \text{ மி.லிட்டர்}$$
நண்பனுக்கு கொடுத்தது = 100 மி.லி
மீதமுள்ள பழச்சாறின் அளவு = $$1000 - 100$$
$$= 900 \text{ மி.லி}$$
4. லிட்டரை, மில்லி லிட்டராக மாற்றுக.
(i) 1லி = 1000 மிலி
(ii) 7 லி = 7000 மிலி
(iii) 5 லி = 5000 மிலி
(iv) 9 லி = 9000 மிலி
(v) 4 லி = 4000 மிலி
5. மில்லி லிட்டரை லிட்டராக மாற்றுக.
(i) 6000 மிலி = 6 லி
(ii) 2000 மிலி = 2 லி
(iii) 8000 மிலி = 8 லி
(iv) 9000 மிலி = 9 லி
குறிப்பு: 1000 மிலி = 1 லி

Tags: Measurements | Term 3 Chapter 3 | 4th Maths | omtexclasses.com | omtex.co.in