அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு
எண்களில் அமைப்புகள்
எண்களில் அமைப்புகள்
1. எண்களில் உள்ள மடங்குகளின் அமைப்புகளை அடையாளம் காணுதல்
6ன் மடங்குகளைச் சுற்றி
வரையப்பட்டுள்ளன. இதைப் போலவே 5ன் மடங்குகளைச் சுற்றி
மும் 9ன் மடங்குகளைச் சுற்றி
மும், 10ன் மடங்குகளைச் சுற்றி
மும் வரைக.
ஓர் எண்ணை 9ஆல் பெருக்கும்பொழுது, அப்பெருக்கற்பலனில் உள்ள அனைத்து இலக்கங்களின் கூடுதல் 9ன் மடங்காக இருக்கும்.
எடுத்துக்காட்டு
9ன் மடங்குகளை அடிப்படையாகக் கொண்டு எண் அமைப்புகளை உருவாக்குக.
ஓர் எண்ணின் அனைத்து இலக்கங்களின் கூடுதல் 9ஆக இருக்கும் எனில் அந்த எண் 9ன் மடங்கு ஆகும்.
12345679 என்ற எண்ணை 9 அல்லது 9இன் மடங்குகளால் பெருக்கும்பொழுது பின்வருமாறு எண் அமைப்புகள் உருவாவதைக் காணலாம்.