4th Std Maths Term 1 Unit 3 Patterns: Casting Out Nines Method

4th Std Maths Term 1 Unit 3 Patterns: Casting Out Nines Method
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்
எண்களில் அமைப்புகள் : 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்

2. 9களின் நீக்கல் முறையில் கணக்குகளைச் சரிபார்த்தல்

ஓர் எண் அல்லது அவ்வெண்ணில் உள்ள இலக்கங்களின் சேர்ப்பிலிருந்து 9ஐ நீக்கிய பின், மீதமுள்ள இலக்கங்களின் கூடுதல் 9இன் மடங்காக இருப்பின் அவ்வெண் 9ஆல் வகுபடும் எண்ணாகவும் இருக்கும்,

எடுத்துக்காட்டு 1

46908 என்பது 9ன் மடங்காகுமா?

Example 1 Calculation
$$ = 18 $$ $$ = 1 + 8 $$ $$ = 9 $$

எனவே, 46908 என்பது 9 ன் மடங்காகும் அல்லது 9 ஆல் வகுபடும்.

எடுத்துக்காட்டு 1

கொடுக்கப்பட்டுள்ள எண்கள் 9ன் மடங்காகுமா என ஆராய்க

Checking Multiples
(i) \( 2468\cancel{9} = 2 + 4 + 6 + 8 = 20 \)
(இது 9 இன் மடங்காகாது)

(ii) \( \cancel{9}10\cancel{8} = 0 \)
(இது 9ன் மடங்கு)

(iii) \( \cancel{3}1\cancel{6}5 = 1 + 5 = 6 \)
(இது 9ன் மடங்காகாது)

கூட்டல்:

கூட்டல் கணக்குகளில், நாம் 9களின் கூடுதல்களை நீக்கிய பின் மீதமுள்ள இலக்கங்களின் கூடுதல் கண்டு சரிபார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 2

கூட்டல் கூற்றினைச் சரிபார்க்கவும்

3356 + 4729 = 8085

\( \cancel{3}\cancel{3}56 + 4\cancel{7}\cancel{2}\cancel{9} = 8085 \)
Addition Verification
\( 8+4=21 \)
\( 12 = 21 \)
\( 1+2=2+1 \)
\( 3 = 3 \)

கழித்தல்:

கழித்தல் கணக்குகளில், 9களை நீக்கிவிட்டு வேறுபாட்டினை நாம் சரிபார்க்கலாம். (கழித்தல் என்பது கூட்டலின் எதிர்செயல் என்பதை நினைவில் கொள்க).

எடுத்துக்காட்டு

கழித்தல் கூற்றினைச் சரிபார்க்கவும்

4897 − 2186 = 2711

\( 48\cancel{9}7 - 2\cancel{1}\cancel{8}6 = 2\cancel{7}11 \)
Subtraction Verification
\( 19 − 8 = 2 \)
\( 10 – 8 = 2 \)
\( 2 = 2 \)

ஓர் ஈரிலக்க எண்ணை அதன் இலக்கங்களை இடவலமாக மாற்றி அவ்வெண்ணிலிருந்து கழிக்க 9இன் மடங்கு கிடைக்கும்.

எடுத்துக்காட்டு: 52

52ஐ இடவலமாக மாற்ற 25 கிடைக்கும்.

\( \text{அதன் வித்தியாசம்} = 52 - 25 = 27 \)

27 என்பது 9ன் மடங்கு,

செயல்பாடு

Activity