காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி) | 4th Maths : Term 3 Unit 4 : Time
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்
நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி)
பொதுவாக, 12 மணி நேரமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரயில்வே, வானூர்தி, ஆயுத படைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 24 மணி நேரமே பயன்படுத்தப்படுகிறது.
தற்பொழுது நாட்காட்டியில் அமைப்புகளைப் பற்றி கற்றுக் கொள்வோம்.
அருகிலுள்ள நாட்காட்டியிலிருந்து 2 × 2 சதுரத்தை எடுத்துக்கொள்க.
பின்வரும் வழியில் எண்களைக் கூட்டுக. எனவே, கூடுதலின் மொத்தம் 18 என கிடைக்கும்.
3 × 3 சதுரத்தின் அமைப்பைப் பார்க்க.
பின்வரும் வழியில் எண்களை கூட்டுக. எனவே, கூடுதலின் மொத்தம் 51 என கிடைக்கும்.
குறிப்பு:
நாட்காட்டி மூலம் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
செயல்பாடு
5 6 7 8 9 10 11 என்ற வரிசையைக் கருதுக
நடு எண் 8 ஆகும்.
5 மற்றும் 11 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16
6 மற்றும் 10 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16
7 மற்றும் 9 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16
இவற்றை முயல்க
1. மேலே உள்ள செயல்பாட்டின் படி வருடத்தின் ஏதேனும் ஒரு மாதத்தை தேர்ந்தெடுத்து செய்து மகிழ்க
விடை:
நடு எண் 11.
8 மற்றும் 14 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22
9 மற்றும் 13 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22
10 மற்றும் 12 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22