4th Std Maths Term 3 Unit 4 Time: Computing Days Between Dates

4th Std Maths - Term 3 Unit 4 - Time

காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா? | 4th Maths : Term 3 Unit 4 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்

கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா?

ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. 1 வது நாள் ஞாயிறு, 2 வது நாள் திங்கள், 3 வது நாள் செவ்வாய், 4 வது நாள் புதன், 5 வது நாள் வியாழன், 6 வது நாள் வெள்ளி மற்றும் 7வது நாள் சனி = 7

கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா?

ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன.

1 வது நாள் ஞாயிறு, 2 வது நாள் திங்கள், 3 வது நாள் செவ்வாய், 4 வது நாள் புதன், 5 வது நாள் வியாழன், 6 வது நாள் வெள்ளி மற்றும் 7வது நாள் சனி = 7

இன்று வாரத்தின் 6 வது நாள் எனில், நேற்று மற்றும் நேற்றுக்கு முந்தைய நாள் என்னவாக இருக்கும்? நாளை மற்றும் நாளைக்கு அடுத்த நாள் என்னவாக இருக்கும்?


முந்தைய மற்றும் வரும் வாரத்தின் நாளைக் கண்டுபிடித்தல்

எடுத்துக்காட்டு: 14 வது நாள் என்பது சனிகிழமையைக் குறிக்கிறது. 21 வது நாள் என்பது எந்த நாளைக் குறிக்கும் என யூகிக்க முடிகிறதா?

ஒரு மாதத்தில் மற்றும் வருடத்தில் எத்தனை வாரங்கள் என்று முந்தைய வகுப்பிலேயே கற்றுள்ளீர்கள்.

குறிப்பு: இரண்டு வாரங்கள் கொண்டது ஒரு போர்ட் நைட் (fort night) (அ) இரண்டு வார காலம் ஆகும். அதாவது 14 நாட்கள் கொண்டது ஒரு போர் நைட் ஆகும்.

இரண்டு தேதிகளுக்கிடையேயான நாட்களைக் கணக்கிடுதல்:

இரண்டு தேதிகளுக்கிடையேயான நாட்களைக் கணக்கிட, அவற்றிற்கிடையேயான நாட்களை எண்ணுக. ஒரு வேளை இவற்றிற்கிடையே மாதங்கள் இருந்தால், அவற்றிற்கிடையேயான நாட்களைக் கணக்கிடுக.

குறிப்பு: பொதுவாக ஒரு மாதம் = 4 வாரங்கள்

எடுத்துக்காட்டு

சுதந்திர தினத்திற்கும், காந்தி ஜெயந்தி தினத்திற்கும் இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.

தீர்வு:

சுதந்திர தினம் = ஆகஸ்ட்டு 15

காந்தி ஜெயந்தி = அக்டோபர் 2

Calculation Example

எனவே, சுதந்திர தினத்திற்கும், காந்தி ஜெயந்திக்கும் இடையே உள்ள நாட்கள் 47 ஆகும்.

குறிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் 31 நாட்கள் உள்ளன. சுதந்திரதினமானது 15 ஆகஸ்ட் ஆகும். எனவே, 31 இலிருந்து 15 ஐக் கழிக்கவும்.

இவற்றை முயல்க

1. கிறிஸ்துமஸ் மற்றும் குடியரசு தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.

Practice Question 1

2. பொங்கல் மற்றும் மே தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.

Practice Question 2

3. ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.

Practice Question 3

Tags : Time | Term 3 Chapter 4 | 4th Maths காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 3 Unit 4 : Time : Computing the number of days between two given dates Time | Term 3 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம் : கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா? - காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.