5th Standard Maths Term 2 Unit 3 Patterns - Shape Patterns Using Angles Explanation

5th Maths : Term 2 Unit 3 : Patterns

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

5th Maths : Term 2 Unit 3 : Patterns

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்

கோணங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்.

கோணங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்.

கோணங்களின் வகைகளை நினைவு கூர்வோம்.

(i)

Angle Types

பின்வரும் வடிவங்களின் முனைகளில் உண்டான கோணங்களை உற்றுநோக்குக

Equilateral Triangle Angles

இது ஒரு சமபக்க முக்கோணம் ஆகும். இதில் 3 முனைகளில் 3 கோணங்கள் உருவாகியிருப்பதை நாம் காணலாம். 3 கோணங்களும் சமம் மேலும் அவை அனைத்தும் 60° ஆகும். அதனைப் பின்வருமாறு எடுத்துக் கூறலாம்.

Triangle Info

சமபக்க முக்கோணத்தைக் கொண்டு ஒழுங்கு அறுங்கோணத்தின் கோணங்களை கண்டறிதல்.

Regular Hexagon

ஓர் ஒழுங்கு அறுங்கோணத்தின் கோணங்களை நாம் சமபக்க முக்கோணத்தின் உதவியுடன் கண்டறியலாம். ஒரு ஒழுங்கு அறுங்கோணத்தில் சமபக்க முக்கோணத்தை படத்தில் உள்ளவாறு அமைக்க.

Hexagon with Triangles
Hexagon Calculation
\(60^\circ + 60^\circ + 60^\circ + 60^\circ + 60^\circ + 60^\circ = 360^\circ\)

ஓர் ஒழுங்கு அறுங்கோணத்தின் மையத்தில் அமையும் கோணம் 360° ஆகும். ஒழுங்கு அறுங்கோணத்தின் மையக்கோணமும் வட்டத்தின் கோணமும் 360° ஆகும். ஒழுங்கு அறுங்கோணத்தின் ஒவ்வொரு உச்சியில் உள்ள கோணம் 120° ஆகும்.

Vertex Angle

ஒரு சதுரத்தின் கோணத்தைக் காணுதல்

ஒரு வட்டத்தின் கோணம் 360° ஆகும். ஒரு வட்டத்தைப் பயன்படுத்தி சதுரத்தின் கோணத்தைக் காண்போம்.

Square Angle
\(360^\circ \div 4 = 90^\circ\)

மேலே உள்ள படத்தில் காண்பித்திருப்பதுபோல் 4 சதுரங்களை வைக்கவும். மையத்தில் உருவாகியிருக்கும் கோணம் ஒரு வட்டமாகும். வட்டத்தின் கோணம் 360° ஆகும். இப்போது சதுரத்தின் கோணம், 360° ÷ 4 = 90° ஆகும்.