5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்
சுழலும் கோணங்கள் (Rotating angles)
இராட்சத இராட்டிணம் சுழல்வதை பாருங்கள். ஒவ்வொரு பெட்டியும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று மீண்டும் அந்த இடத்திற்கே திரும்புவதை காணலாம்.
சுழலும் கோணங்கள் (Rotating angles)
இரங்கு இராட்டிணம் (இராட்சத இராட்டிணம் − Giant wheel)இராட்சத இராட்டிணம் சுழல்வதை பாருங்கள். ஒவ்வொரு பெட்டியும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று மீண்டும் அந்த இடத்திற்கே திரும்புவதை காணலாம்.
ஒரு கடிகாரத்தினுள் நிமிடமுள் மற்றும் மணி முள் சுழல்வதன் வழியாக நேரத்தை காட்டுகிறது. கடிகாரத்தின் நிமிட முள்ளும் மணி முள்ளும் கோணத்தை ஏற்படுத்துகிறது. கடிகாரத்தின் முள்கள் சுழல்வதனால் ஏற்படும் பல்வேறு கோணங்களை உற்றுநோக்குங்கள்.
நள்ளிரவு 12 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை கடிகாரத்தின் மணிமுள் ஒரு சுழற்சியை முடித்திருப்பதை நாம் காணலாம். அதாவது \(360^\circ\) கோண சுழற்சியை ஒருமுறை நிறைவு செய்திருக்கும். அதே நேரத்தில் நிமிடமுள்ளானது 12 சுழற்சிகளை நிறைவு செய்திருக்கும். அதாவது \(360^\circ\) கோண சுழற்சியை பன்னிரெண்டு முறை நிறைவு செய்திருக்கும்.