5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்
பயிற்சி 3.2 (கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்)
பயிற்சி 3.2
1. கன சதுரம், கனசெவ்வகம் போன்ற ஒழுங்கு திண்மங்களுக்கான கனஅளவை, அவற்றின் பக்க அளவுகளைப் பெருக்குவதன் மூலம் காணலாம். கொடுக்கப்பட்ட அட்டவணையை நிறைவுசெய்து கொடுக்கப்பட்டப் பொருளின் கனஅளவைக் காண்க.
2. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.
3. \(300 \text{ செ.மீ} \times 200 \text{ செ.மீ} \times 20 \text{ செ.மீ}\) நீளமுள்ள சுவரை எழுப்ப \(20 \text{ செ.மீ} \times 5 \text{ செ.மீ} \times 10 \text{ செ.மீ}\) அளவுள்ள செங்கற்கள் எத்தனை தேவை?
சுவரின் கன அளவு = \(300 \times 200 \times 20\)
= \(12,00,000 \text{ க.செ.மீ}\)
செங்கலின் கன அளவு = \(20 \times 5 \times 10\)
= \(1000 \text{ க.செ.மீ}\)
செங்கற்களின் எண்ணிக்கை =
= \(1200\)
4. \(3 \text{ மீ} \times 18 \text{ மீ} \times 9 \text{ மீ}\) அளவுள்ள அறை முழுவதும் \(15 \text{ செ.மீ} \times 45 \text{ செ.மீ} \times 90 \text{ செ.மீ}\) அளவுள்ள சணல் பையில் அரசி நிரப்பி வைக்க எத்தனை சணல் பைகள் தேவைப்படும்?
அறையின் கன அளவு = \(3 \times 18 \times 9\)
= \(486 \text{ க.மீ.}\)
= \(486000000 \text{ க.செ.மீ.}\)
சணல் பையின் கன அளவு = \(15 \times 45 \times 90\)
= \(60750 \text{ க.செ.மீ.}\)
சணல் பையின் எண்ணிக்கை = \(486000000 / 60750\)
= \(8000\)