5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்
கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்
கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்
கூட்டல்
4 மணி 30 நிமிடம் மற்றும் 2 மணி 45 நிமிடம்
கிருஷ்ணா தன் கிராமத்திற்கு பேருந்தில் 4 மணி 35 நிமிடமும் மற்றும் 1 மணி 55 நிமிடம் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியும் சென்றடைந்தார். அவர் பயணம் செய்த மொத்த நேரம் எவ்வளவு?
\(90 \text{ நிமிடங்கள்} = 60 + 30 \text{ நிமிடங்கள்}\)
\(60 \text{ நிமிடங்கள்} = 1 \text{ மணி}\)
\(30 \text{ நிமிடங்கள்} = 30 \text{ நிமிடங்கள்}\)
\(5 + 1 = 6 \text{ மணி } 30 \text{ நிமிடங்கள்}\)
கழித்தல் : 3 மணி 45 நிமிடத்தை 5 மணி 30 நிமிடத்திலிருந்து கழிக்க.
45 நிமிடங்களை 30 நிமிடங்களில் இருந்து கழிக்க இயலாது. எனவே 5 மணியிலிருந்து 1 மணியை 60 நிமிடமாக மாற்றி (60+30) 90 நிமிடமாக மாற்றியபின் 45 நிமிடத்தைக் கழித்தால் மீதம் 45 நிமிடம் கிடைக்கும்.
3 மணியை 4 மணியிலிருந்து கழித்தால் மீதம் 1 மணி
இராம் கணினியில் காலை 10 மணியிலிருந்து மாலை 3:30 மணி வரை வேலை செய்தார் எனில், அவர் கணினியில் வேலை செய்த மொத்த நேரம் எவ்வளவு?
இராம் மாலை வரை வேலை செய்த நேரம் = 3 மணி 30 நிமிடங்கள்
இராம் காலையில் வேலை ஆரம்பித்த நேரம் = 10 மணி 00 நிமிடங்கள்
பி.ப மணியுடன் 12 ஐ கூட்டி மு.ப நேரத்தைக் கழிக்கவும்.
\(3.30 \text{ மணி} + 12 \text{ மணி} = 15.30 \text{ மணி}\)
பள்ளி கால அட்டவணை
1. பள்ளியில் முதல் மணி ஒலிக்கும் நேரத்திற்கும் காலை இடைவேளைக்கும் இடையே உள்ள கால அளவை கணக்கிடுக
முதல் மணி நேரத்திற்கும் காலை இடைவேளைக்கும் இடையே உள்ள காலம் 2 மணி நேரம் ஆகும்.
2. பாடவேளை தொடங்கும் நேரத்திற்கும் காலை இடைவேளை முடியும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு?
பாடவேளை தொடங்கும் நேரத்திற்கும் காலை இடைவேளை முடியும் நேரத்திற்கும் இடையே உள்ள கால அளவு 1 மணி 40 நிமிடம்.
3. காலை பாடவேளை ஆரம்பிக்கும் நேரத்திற்கும் மதியம் பள்ளி முடிவடையும் நேரத்திற்கும் இடையே உள்ள காலம்?
காலை வகுப்பு தொடங்கும் நேரத்திற்கும் மதியம் பள்ளி முடிவடையும் நேரத்திற்கும் இடையே உள்ள கால அளவு 6 மணி 40 நிமிடங்கள்.
மதியம் பள்ளி தொடங்கும் நேரத்திற்கும் மாலை பள்ளி முடியும் நேரத்திற்கும் இடையை உள்ள கால அளவு கண்டுபிடி.
விடை : 2 மணி 10 நிமிடங்கள்
முற்பகலிலிருந்து பிற்பகலைக் கழிக்கும்போது பிற்பகலுடன் 12 மணி நேரத்தைக் கூட்டி, பின்பு முற்பகலைக் கழிக்க வேண்டும்.